பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இறைவனே உன்னை எண்ணும்
இனியஓர் இதயம் தந்தாய்!
கறையுடை வாழ்க்கை யேனைக்
காப்பதுன் பாரம் ஐயா!

(நவராஜ் செல்லையா)

என்று நான் எழுதிய கவிதை ஒன்றை, இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

குறையில்லாத நல்ல உடலோடு நன்றாக நம்மை இறைவன் படைத்ததற்காக முதலில் நன்றி கூறுவோம்.

அத்துடன் நின்று போவது அறிவுடையோர்க்கு அழகல்லவே! அதற்குப்பின் தானே, வாழ்வின் வெற்றியே மிகுந்து கிடக்கிறது!

என்ன செய்வது?

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந்திரம்)

நன்றாக உடல் பெற்ற திருமூலர், தன்னைத் தமிழில் நன்கு கவிதைகள் இயற்றி, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யுமாறு படைத்தார் என்ற நம்பிக்கையுடன், இலட்சியமாகத் தனக்கு முடிந்ததை, தன்னால் இயன்றதைச் செய்தார்.

இலட்சியமற்ற வாழ்க்கை, மிருக வாழ்க்கை.

உண்டு உறங்கி, ஊரெல்லாம் திரிந்து,

மயங்கிக்கிடப்பது மனித வாழ்க்கையல்ல,

அறிவைப் பயன்படுத்தித் துணையாகக் கொண்டு, உடலைப் பயன்படுத்தி முதலாகக் கொண்டு, தனக்கும்