பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அடைவர் என்பதாகவே, எல்லோரும் பொருள் கூறிச் சென்றிருக்கின்றனர். இப்பொழுது இதையே எல்லோரும் பின்பற்றி வருகின்றனர்.

         வள்ளுவரை சற்று ஆய்வுக்குள்ளாக்கி, அவரது வாழ்க்கை நிலையை ஆராய்ந்த பிறகு, ஏற்பட்ட எனது தெளிவின் காரணமாக, இந்தக் குறளுக்கு ஒரு புதிய பொருளைச் சொல்லுகிற தெம்பைக் கொடுத்திருக்கிறது.
           வள்ளுவர் சிறந்த போர் வீரராக வாழ்ந்தவர். பாண்டிய மன்னனான ஒள்வேள் பெரும் வழுதியின், உள்நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர்.
       அவர் மக்களுக்கு வீரம் மட்டும் வேண்டும் என்று சொல்லவில்லை. வலிமையான உடல் வேண்டும். அதைக் காக்க, அறிவு பூர்வமான உணவு முறை வேண்டும். அந்த உணவிலும், கட்டுப்பாடான ஏற்கும் முறை வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தியவர்.
              ஆகவே, வள்ளுவரானவர் சிறந்த ராஜ தந்திரி மட்டு மல்ல, மேன்மை மிகு மருத்துவ மேதையாகவும் திகழ்ந்திருக்கிறார்.
              இந்தக் கருத்துக்களின் அடிப்படையில்தான் நாகாக்க எனும் சொல்லுக்குப் புதிய பொருள் காண முனைந்தேன்.

வாயும் வயிறும்

           நாக்கு எனும் புலி குடியிருக்கும் குகையாக, வாய் இருக்கிறது.
        வாய் எனும் சொல்லுக்கு வழி என்பது ஒரு அர்த்தம். 
       வாயைத் தன்வசப்படுத்தி, வழிகாட்டக் கூடிய வல்லமை நாக்குக்கு உண்டு.