பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

53


தொடர்ந்து உணவைக் கடித்து, கிழித்து, அரைத்துக் கொண்டிருக்கும் பற்கள், தூய்மையை இழந்து போய்விடக் காரணமாவதால், துன்பத்திற்கும் ஆளாகி விடுகின்றன.

பல்லுக்கு ஏற்படுகிற பற்சிதைவும், பல்வலியும், பல் தேய்வும் ஏற்பட்டு, கூடிய சீக்கிரத்தில் பற்களை பலம் இழக்கவும், ஆட்டம் கொடுக்கவும் கூடிய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது.

'பல்போனால் சொல் போகும்' என்று ஓர் பழமொழி உண்டு. பற்கள் இழப்பின் காரணமாக, பேசும் பொழுது, பேசுகிற சொற்களின் ஓசையும் ஒலியும் வேறுவிதமாக வாயிலிருந்து கிளம்பும். அந்த மாதிரி பேச்சு, பல்லற்ற பேச்சாளருக்குப் பெருங் குற்றத்தை ஏற்படுத்தி, துன்பத்தையும் உண்டாக்கிவிடும்.

ஆகவே தான், பற்களை இழந்து போகின்ற அளவுக்கு, நாவானது வாய்க்கு வேதனையும், வயிற்றுக்கு வாதனையையும், பற்களுக்கு வேதனையையும், வாழ்வுக்கு சோதனையையும் ஏற்படுத்தி விடுகிறது.

ஆகவே, நலமாகப் பேச நாம் நாக்கைக் காத்துக் கட்டுப்படுத்திப் பேச வேண்டும்.

நாம் நலமாக வாழ நாக்கைக் கட்டுப்படுத்திக் காத்து, உணவுண்ன வேண்டும்.

பேச்சும் இனிமை தான், உணவும் இனிமைதான். இனிமை இனிமையோடு தொடர வேண்டுமானால், அதில் காக்கும் தன்மையும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.

அந்தக் கட்டுப்பாட்டைத் தான் வள்ளுவர் கூறியிருக்க வேண்டும் என்று நம்பலாம்.