பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

57


'ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூவி உருவமற்ற வெறுமையாயிருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. வெளிச்சம் உண்டாகுக என்று கடவுள் சொன்னார் வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிட்டார். பகலை ஆள பெரிய சுடர் ஒன்றும், இரவை ஆள சிறிய சுடர் ஒன்றுமாக, இரு பெருஞ் சுடர்களைக் கடவுள் உண்டாக்கினார்' என்று ஆதியாகமத்தில் உள்ள வாசகங்கள் நம்மை பிரமிப்புக் குள்ளாக்குகின்றன.

ஆதியில் தோன்றிய சூரியன், அனைத்து உலகிற்கும் அருமையான வெளிச்சத்தை அளிப்பதுடன், ஆற்றல் மிகு சக்தியையும் மனிதகுலத்திற்கு வழங்குகிறது என்பது தான், நமது துறைக்கு ஏற்ற கருத்தாகும்.

உயிர்களுக்கெல்லாம் உணர்வையும், உணர்ச்சியையும், உத்வேகத்தையும் ஊட்டக்கூடிய உந்துதல் சக்தி சூரியனுக்கு உள்ளது.

சூரியன் அமைப்பும் சிறப்பும்

பூமியிலிருந்து விண்ணில் மின்னுகிற நட்சத்திரங்களுக்குள்ளே, பெரியவற்றிற்கும் சின்னவற்றிற்கும் இடைப்பட்ட ஒன்றாக, ஒளி மிகுந்தனவற்றிற்கும் ஒளி குறைந்தனவற்றிற்கும் நடுத்தரமான ஒன்றாக, சூரியன் இருக்கிறது.

அதன் தூரம் பூமியிலிருந்து 1,49,598 கிலோ மீட்டர் தூரமாகும். சூரியனின் விட்டமானது 1,392,000 கி.மீட்டர் என்றும் கூறுவர்.

சூரியனைச் சுற்றியே மற்ற கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன என்று வானவியல் அறிஞர்கள் வர்ணிப்பார்கள்.