பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

61




1. கண்ணுக்குத் தெரிகிற ஒளி (Visible); பார்வைக்குப் படுகிற ஒளியானது 1/2 பாகத்திற்கு மேல் இருக்கிறது


2. குறைந்த அலை உடைய (Shorter wave length) அல்ட்ரா வயலெட் (Ultra Violet) ஒளி


3. வலிமையானதும், நீண்ட அலைகளை உடையதுமான இன்ஃப்ராரெட் (Infra Red) ஒளி.


சூரிய ஒளியிலே, மிகக் குறைந்த அளவுள்ள அல்ட்ரா வயலட் ஒளிதான். D வைட்டமின் சக்தியை உருவாக்கியது.


இந்த அல்ட்ரா வயலட் ஒளியானது, தோலிலுள்ள திசுக்களில் பாய்ந்து, D வைட்டமினை உற்பத்தி செய்கிறது.


D வைட்டமின்


D வைட்டமின் சக்தியை, உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெற முடியாது. சூரிய ஒளியிலிருந்து தான் தேவையான அளவு பெற்றுக் கொள்ள முடியும்.


வளரும் குழந்தைகளுக்கு 10 மைக்ரோ கிராம்கள் அளவுக்கு D வைட்டமின் தேவைப்படுகிறது.


அதுபோலவே, ஒவ்வொரு மனிதருக்கும் 200-400 மைக்ரோ கிராம் D வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.


இந்த அளவு D வைட்டமின் பெற, ஒருவர் 2 முதல் 4 அவுன்ஸ் பால் குடிக்கலாம் என்பதும் ஒரு கணக்கு.


என்றாலும், சூரியனிடமிருந்து பெறுகிற D வைட்டமின் தான் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றதாகவும், உறுதுணையாகவும் அமைந்து உள்ளது.


சில மணி நேரம் வெயிலில் இருக்கிற போது, சூரிய ஒளியானது, உடல் தோல் பகுதியில் இறங்கி, அதனுடன்