பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



சாதமும் சாதனையும்

பானையில் சாதம் என்பது உடலில் சாதனை என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

பானையை வீணாக்கிவிட்டு, பயன்படாமல் ஓட்டையாக்கிவிட்டு, அதில் தண்ணீர் ஊற்றிப் பார்த்தால், பானைதான் தாங்குமா? தண்ணீர்தான் தங்குமா?

உடலை நாம் உதாசினப் படுத்திவிட்டு, சரித்திரம் புகழும் சாதனையைப் படைக்கப் போகிறோம் என்றால், அது நடக்கிற காரியமா?

அடுப்பில்லாமல் பானையை, அலங்கோலமாகப் போட்டுவிட்டு, சமைக்க முயல்வதும் சாத்தியமா?

உடலுக்கு உறுதிதர, ஒப்பற்ற சக்தியை விளைவிக்க ஆடுகளங்களும், ஓடுகளங்களும் அளவற்ற உதவியை அளிக்கின்றன.

ஆனால், அடுப்பை உடைத்துவிட்டு, பானை வைக்க இடம் இல்லாமல், சமையல் செய்யவே லாயக்கற்றவர் என்றால் நாம் ஆடுகளங்களை அழித்துவிட்டு விளையாட்டுக்கு உடலை விலை பேசுகிறோம் என்றால், விளங்குகிற காரியமா?

அடிப்படை அறிவு கூட இல்லாமல், நாம் சாதனைப் படைக்கப் போகிறோம் என்று சலசலத்துக்கொண்டிருக்கிறோமே!

அடுப்புக்கு மேல் உள்ள பானையில், தண்ணீர் - வேண்டுமே!
அரிசி பொங்க, சாதமாக தண்ணிர் தேவையல்லவா!