பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

67


அனலும் இலட்சியமும்

இலட்சியம் இல்லாத மனிதன், மரக்கட்டைக்குச் சமம். கொள்கை இல்லாத மனிதன் குரங்கிற்குச் சமானம்.

உண்டு உறங்கி, சாணம் போடுகிற மிருக ஜாதிக்கும், இலட்சியமும் கொள்கையும் இல்லாத மனித ஜாதிக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை?

ஈடுபாடு கொள்ளாத மனித இதயம் இருந்தென்ன? போயென்ன?

மனிதர்களுக்கு திறமை என்பது என்றும் இயற்கையாக பிறந்திருப்பது. அடுப்பிற்கு அனல் போல, உடலுக்கு திறமை இருக்கிறது.

அனல் இல்லாத அடுப்பு என்றால், அடுப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அர்த்தம். திறமை இல்லாத மனிதர் என்றால், அவர் உடலை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்!

அனலை அணையாமல் வளர்த்துக் கொண்டே இருப்பது விறகு அல்லது அதற்கிணையான கேஸ் போன்ற பொருட்கள் பல உண்டு.

அதுபோலவே, அனல் என்ற உழைப்பை அணைந்து போகாமல், ஆரவாரத்துடன் எரியவிட்டுத் துணை செய்வது முயற்சி என்கிற விறகுகளாகும்.

விறகை அடுப்பிற்குள் போட்டு அனலை உண்டாக்கிவிடுவது போலத்தான் ஆடுகளத்திற்குள் போய் உடலை உழைப்புக்குப் பயிற்சிக்கும் ஆளாக்கிப் பயன் காண்பதாகும்.