பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முனைப்பும் முயற்சியும்

எத்தனை தான் இருந்தாலும், சமைக்கும் தொழிலில் ஈடுபடுபவர், தன் உள்ளம் மகிழ்ந்து ஈடுபட வேண்டும். அதைத்தான், தன் முனைப்பு என்பார்கள்.

தன் முனைப்பு உள்ளவர்கள்தாம், தமது திறமையை தேர்ந்த முறையில் பயன்படுத்தி, சாதனை செய்திடும் வல்லவர்களாகத் திகழ்வார்கள்.

தன் முனைப்பு இல்லாதவர்களை தடியர்கள் எனலாம். தற்குறிகள் என்று அழைக்கலாம். தான் தோன்றித் தனமாகத் திரியும் தறுதலைகள் என்றும் கூறலாம்.

பானையை பதமான அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, போதிய அளவு அரிசியைப் போட்டு, அனலை மூட்டி, தொடர்ந்து எரிய வைத்து, கால நேரத்தோடு கவனித்து திறமையாகத் தொழிலைச் செய்யும் போது தான், சாதம் என்ற சாதனையைப் பெற முடிகிறது.

நமது விளையாட்டுத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்ற நமது சமையல் பாடம், சர்க்கரைக் கருத்தாக அல்லவா நமக்கு போதித்துக் கொண்டிருக்கிறது!

'வெறும்பானை பொங்குமோ மேல்' என்று பாடிய ஒளவைப் பாட்டி, இன்னொரு கருத்தையும், மிக அழகாகக் கூறிச் சென்றிருக்கிறாள்.

குருட்டு வீச்சு

கண்கள் இல்லாத ஒரு குருடன், சாலையில் கைத்தடியை ஊன்றியவாறு நடந்து செல்கிறான். சாலையிலே நிற்கிற மாமரத்தில், பழம் பழுத்த வாசனையை அவன் நுகர்ந்து மகிழ்கிறான்.