பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பார்ப்பவனாகிய (தலைவனாகிய) மனிதனுக்குச் சொந்தமாக 5 பசுக்கள் இருக்கின்றன என்கிறார் திருமூலர்.

பசுக்களும் புலன்களும்

பசுக்கள் என்பன புலன்கள் ஆகும்

ஐம்புலன்கள், ஐம்பூதங்கள் என்னும் வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஐம்பூதங்கள் எவை எவை? விசும்பு, வளி, அங்கி, மழை, நிலம் என்பன.

அதாவது, விசும்பாகிய வானம், வளியாகிய காற்று, அங்கியாகிய தீ, மழையாகிய நீர், இவற்றைத்தாங்கும் நிலம் இந்த உலகைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் ஐம்பூதங்களாகும்.

ஐம்புலன்கள் எவை எவை? மெய், வாய், கண், மூக்கு, செவி.

இவற்றின் செயல் நுணுக்கத்தை வள்ளுவர் மிக அழகாக விளக்கிக் கூறியிருக்கும் குறளைப் படியுங்கள்.

'சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கட்டேயுலகு."

வாயில் சுவையும், கண்ணில் ஒளியும், மெய்யில் உணர்வும், செவியில் ஓசையும், மூக்கில் நாற்றமும் அறியும் பண்புகளைக் கொண்டதால், இவற்றை சிறப்புப் புலன்கள் (Special Organs) என்று இந்நாள் விஞ்ஞான மேதைகள் குறிப்பிட்டுப் புகழுவார்கள்.

ஐம்புலன்களில் ஒருவர் ஒன்றை இழந்தாலும், அல்லது குறைவாகக் கொண்டிருந்தாலும் இந்த இனிய, அழகான உலகினை அனுபவித்து மகிழ்வதில் குறை கொண்டவர்களாகவே வாழ நேர்கிறது.