பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியத்திற்கு செய்த தொண்டினை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியத்தை உருவாக்கி அதை வளர்த்த பெருமையும் அவரையே சாரும்.

          விளையாட்டு வீரானாக பள்ளிகளிலும், கல்லூரி களிலும் தனது விளையாட்டுத் துறை பயணத்தை தொடங்கிய நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத் துறை பட்டய படிப்பிலே தங்கப் பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்றார்.
                                         
    தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே விளையாட்டுத் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். சென்னை வித்தியா மந்திர் மெட்ரிக் பள்ளி, பாடி டி.வி.எஸ் நிறுவனங்கள், சென்னை ஒ.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரி முதலிய புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணியாற்ற,


" "தான் பெற்ற அனுபவங்களே விளையாட்டுத் துறை" நூல்களை ஈடுபாட்டுடன் எழுதுவதற்கு எனக்கு துணை நின்றன என்று அவரே தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

1960 முதல் தினமணி முதலிய பல்வேறு இதழ்களில் விளையாட்டுக்கள் பற்றி எழுதியும் வானொலி, தொலை காட்சி மூலமாகவும் விளையாட்டுத் துறை, உடல்நலம் மற்றும் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்துத் தந்துள்ளார்.
 1977-ல் விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை ஆரம்பித்து 2001 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். விளையாட்டுக் களஞ்சியம் இதழில் வெளிவந்த கட்டுரை