பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




மீண்டும் சந்திக்கிறோம். இடைவெளி இல்லை, இனி இப்படி சூழ்நிலை எழவாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில், முக மலர்ச்சியுடன் சந்திக்கிறோம். சிந்திக்கிறோம்.


நம்மிடையே எத்தனை எத்தனை வகையான மக்கள் வாழ்கிறார்கள்?


வாழத் துடிக்கும் மக்கள், வாழ்வில் துடிக்கும் மக்கள் வாழ்வை பழிக்கும் மக்கள், வாழ்வைப் படிக்கும் மக்கள், பிறர் வாழ்வை அழிக்கும் மக்கள் என்று பலவகை மக்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழ்ந்து கொண்டிருக் கிறோம்.


ஒரு நல்ல வாழ்வு வாழ்வதென்பது எளிதல்ல, ஆனால் ஒரு வாழ்வை வாழ்ந்து விடுவது எளிதென்றுதான், எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.


ஓடுகிறதண்ணிரில் மிதந்து செல்வது ஒருவகை. அந்தத் தண்ணிரில் மிதக்கத் தெரியாமல், தண்ணிரை குடித்துக் கொண்டே, தவித்துக் கொண்டும் தத்தளித்துக் கொண்டும் செல்வது மற்றொரு வகை.


இந்த வகை மக்கள் தாம், நம்மிடையே ஏராளம். நாடு முழுதும் ஏராளம். மிதக்கும் வாழ்வைத்தான் மேன்மையான வாழ்வு, மேலான வாழ்வு என்று நம்பி மனப்பால் குடித்துக் கொண்டு மனதால் துடித்துக் கொண்டு வாழ்கின்றனர்.