பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102

செறிவும் கிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான ‘ே

என்று பெண்ணிடம் குடிகொண்டிருக்க வேண்டிய தன்மைகளைக் குறிப்பிடுவர். இவ்வடிகளுக்கு உதை கண்ட உரையாசிரியர் இளம் பூரண வடிகள், “செறிவு என்பது அடக்கம்: கிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது கன்மை பயப்பனவுங் தீமை பயப்பனவும் அறிதல், அருமை என்பது உள்ளக் கருத்து அறித லருமை’ என்று அருமைப்பாட்டுடன் பெண்மை நலத்தின் சிறப்பினே எடுத்து மொழிந்துள்ளார்.

இத்தகு பெண்மை நலம் வாய்க்கப் பெற்ற பெண்கள் பெருமையும் உரனுங் கொண்ட ஆடவரைக் களவின் வழிக் கண்டு. காதலில் கட்டுண்டு, பின் இல்லற வாழ்வில் தலைப் படுவர். இல்லறம் இனிமையுற நடைபெற வேண்டு மாயின் பொருள் மிகுதியும் தேவைப்படுகின்றது. பொருளி லார்க் கிவ்வுலகம் இல்லையன்றாே? மேலும் தம் சுற்றத் தினரைப் புரத்தலும், தம்பால் ஒன்று இரப்பார்க்கு இல்லை. யெனது ஈதலும் தலைவனின் தகுதி சான்ற கடன்களாகும். இதனைத் தலைவி,

‘’ தங்கடன் கிறீஇய ரெண்ணி யிடங்தொறும்

காமர் பொருட்பிணிப் போகிய நாம்வெங் காதல் ‘4

என்று குறிப்பிடுகின்றாள். இதனேயே கற்றறிந்தார் எத்தும் கலி’

3. கொல்காப்பியம்: பொருளியல்: 15 4. குறுந்தொகை: 255: 6.8