பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

பொருள்வயிற் பிரிவு

பழந்தமிழர் தம் அகவாழ்வு பீடு சான்றது. காதலர் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே என்றபடி அன்பின் ஐந்திணையில் தலைப்பட்டுக் காதல் நெஞ்சுடன் கருத் தொருமித்து இல்வாழ்க்கையில் கிற்பர். இல்வாழ்க்கையில் ஈடுபட்ட தலைமக்கள் இடையீடற்ற இன்பம் விழைந்து தொடக்க நாட்களில் வாழ்வர். இவ்வின்ப விலையினைத் தொல்காப்பியனர், o

‘ கரணத்தின் அமைந்து முடிந்த காலை

கெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சி ‘. ‘

என்று குறிப்பிடுவர். இந்த இன்ப கிலேயே கெடிதும் நீடிக்க உலக வாழ்க்கைக்கு உயிர்காடியாக உள்ள பொருள் தேவை. “காதலரின் அன்பு வாழ்க்கைக்குப் பொருள் ஒரு சிறந்த கருவியாகும் என்பர்.

பொருட்பாலில் பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில்,

“ அறனினும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள் ‘ “ என்று பொருளின் பயனைக் குறிப்பிட்ட திருவள்ளுவர் அறத்துப்பாலில் “அருளுடைமை'யினைச் சொல்லுமிடத் திலும்,

1. தொல்காப்பியம் : 1092. 2. திருக்குறள் : 754.