பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122

வீட்டும் முயற்சியில் காதலன் காதலியைவிட்டு நீங்குவது. என்பது இதன் பொருளாகும். கற்புக் காலத்து நேரும் பிரிவு பொருள்வயிற் பிரிதல்’ என்று வழங்கும். கற்புக் காலத்து நிகழும் பொருள்வயிற் பிரிவுக்குத் தொல்காப் பியம் காட்டும் காரணங்கள் பின்வருமாறு :

“ நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும். ‘ தொல்காப்பியனரின் இக்கருத்தினை அடியொற்றியே. சங்க இலக்கியங்கள் பொருள்வயிற் பிரிவுக்குரிய கார ணங்களை அமைவுறப் புலப்படுத்தி கிற்கக் காண

G\)/ITLD.

தாயத்தின் வழி வரும் பொருள்களைத்

துய்த்தல் சிறப்பன்று :

“ மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்

பாறர வந்த பழவிறற் ருயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே ‘’ ‘’ என்னும் புறநானூற்றுக்குப் பழைய வுரைகாரர் எழுதி யுள்ள உரையால் தாய வழிவரும் பொருளினைத் துய்த் தலை அக்கால அரசர்கள் விரும்பவில்லை யென்பது புலகிைன்றது. அரசர் பொருளிட்டக் கூடிய வழிகளுள் ஒன்று குடிமக்களிடமிருந்து பொருள் திரட்டுவது என்பது

13. தொல்காப்பியம் : அகத்திணையியல்: 41: 7.11

14. புறநானூறு : 75 : 1.5. 15. புறநானூறு: 75 : 1.5 உரை