பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129

‘ நறுநுதல் நீத்தல் பொருள்வயிற் செல்வோய்

உரனுடை உள்ளத்தை ‘ “ என்றும் தலைமகனைக் குறிப்பிடுகின்றாள்.

“ பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னும்

அருளில் சொல்லு நீசொல் லினையே ‘ ‘ என்று தலைமகன் கூற்றினை ‘அருளில் சொல்’ என்று கூறி அரற்றுகின்றாள்.

தன் நெஞ்சம் நிறை கடந்து செக்குருகவும், தலைமகன் அன்பின்மை காரணமாக அருளைப் பொருளாக எண்ணுமல் பொருளைப் பொருளாக எண்ணுவதாகக் குறிப்பிடுகின்றாள்.

நெஞ்சே நிறையொல் லாதே யவரே அன்பின் மையி னருள்பொரு ளென்ஞர் வன்கண் கொண்டு வலித்துவல் லுகரே ‘ “

இருபேராண்மை செய்த பூசல்:

தன் மாட்டுக் கொண்ட அன்பு காரணமாகத் தலைமகன் தன்னேவிட்டு ஒருநாளும் பிரியான் எனத் தலைமகள் உறுதியாக எண்ணிள்ை. தலைமகனே தலைமகளிடம் கூறிப் பிரிந்து செல்வதென்றால் தலைமகள் அதற்கு உறுதியாக உடன்படமாட்டாள் என எண்ணினன். ஒருநாள் சொல்லாது பிரிந்தான்; தலைமகள் பிரிவை உணர்ந்தாள்: ால்ல பாம்பு கடித்தால் நஞ்சு எப்படி விரைய ஏறுமோ அது போன்று அவள் அல்லல் கெஞ்சம் சுழன்று திரிந்து

46. கலித்தொகை: 12 : 9.10

41. கலித்தொகை : 21 : 4.5

42. குறுந்தொகை: 395 : 1.3

9