பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135

உயரிய வாழ்விற்கு உறுதுணையாவது என்னும் சீரிய, நோக்கு-மக்கள் உள்ளத்தை-குறிப்பாகக காதல் கெஞ் சங்களைச் செம்மைப்படுத்தியது. காதலனும் காதலியும் ஒருவர்க் கொருவர் விட்டுக் கொடுத்து-ஒருவர் இன்பத் திற்காகத் துன்பம் நேரிடுமானலும் அதனைத் தாங்கிக் கொள்வது என்னும் விழுமிய பண்பாடு நிலவிய காலமே சங்க காலம். சுருங்கக் கூறின் உள்ளத்தின் பண்பாடு உயர் நிலையில் துலங்கிய காலம் வளமான சங்க கற் பொற் காலமாகும்.

தொடக்கத்தில் இளைய காதல் நெஞ்சங்களின் காதற் புது வாழ்வு கவலையின் சிறு கீறல்களு மின்றிப் புதுப் புன்னகையுடன் பொலியும்; பின் கைப்பொருள் சுருங்கும். அதல்ை இளமை உள்ளங்களில் துன்பத்தின் நிழல் வந்து படியும். கவலை இன்னதென்று அறியாமல் வாழ்ந்த வாழ்க்கையில் அவலத்தின் ஒலம் கேட்கத் தொடங்கும். பொருள் வேண்டும் என்ற புதுக் கவலை தொடங்கும். தங்களின் தன்னல வாழ்வின் இன்பத்திற்கு மட்டுமா பொருள் தேவை? இல்லை. ‘அறங்குன்றாத நல் வாழ்வும், பிறர்தம் வீடு சென்று இரக்காத செல்வமும் ஆகிய இரண் டும் பொருளால்தான் ஆகும்’ என்று கம்பினர்.

“ அறன் கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்

பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும். ‘

இது மட்டுமன்று: அக் காலத்தில் விட்டின் தலைவன்

பொருளிட்டிக் கொண்டு வருதல் வேண்டும் என்பதில் பெரிதும் காட்டம் கொண்டான். தலைமுறையாக வழி

3. அகநானூறு : 155 : 1-3