பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

139

பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப் பொறுத்த போலும் வானிற எருத்தின் அணிந்த போலும் செஞ்செவி எருவை குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி தொல்பசி முதுகரி வல்சி ஆகும் சுரன்நமக்கு எளிய மன்னே; கன்மனைப் பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி முருக்தேர் முறுவல் இளையோள் பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.’ “

“நல்ல நல்ல செயல்களைச் செம்மையாகச் செய்து முடிப்பதில் முனையும் மனம் உடையவர்கள் ஆண்கள்: எனவே பொருள் தேடவேண்டும் என்னும் வேட்கை மீதுார அவர்கள் நம்மைப் பிரிந்து செல்வார்கள்; அவ்வாறு பிரிந்து செல்வது ஆண்களுக்கு இயற்கையாக இயைந்த பண்பாகும்’ என்று தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள்:

‘ செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர் ஆடவர் அது.அதன் பண்பே.’ “

வளமான வாழ்வு வாழ்ந்த தலைவன் வறட்சி மிகுந்த பால வழியே தன் பயணத்தைத் தொடர்ந்து மேம் கொள்கின்றான். மலைச் சுனைகள் எல்லாம் நீர் வற்றி வறண்டு காணப்படுகின்றன. மரங்களில் இலைகள் எல்லாம் கீழே: உதிர்ந்துபோய் வெய்யிலின் வெம்மையால் கிளைகள் எல்லாம் இய்ந்து வாடியுள்ளன. நிழலும் ருேம் அற்றலேயில் எங்கும் வறட்சியே குடிகொண்டுள்ள பாலே அது. நீர் வேட்கை மிகுந்த யானை வற்றிய சுனையைத் துழாவிப் பார்த்து ர்ே

8. அகநானுாறு : 193 9. தற்றிணை : 24. 8-9