பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

171

‘’ என்பி லதனை வெயில் போலக் காயுமே

அன்பி லதனை அறம்’ “ ‘அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் கின்ற உடம்பு’ என்று உறுதிப்பட மொழிந்து அன்பின் சிறப்பினே அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவர்.

“ அன்பின் வழியது உயிர்நிலை.” “ இத்தகு மாட்சிமைப்பட்ட அன்பும், ஆண்டவனின் கட்டளையாம் அறமும் உடைத்தாயிருந்தால் இல்லற வாழ்வு பண்போடும் பயனேடும் பொலிந்து தோன்றும் என்பதனை அன்போடு கூறும் வள்ளுவர் வாக்கு ஒள்ளிய தெள்ளிய கருத்துடைய வாக்கே அன்றாே?

வளமான வாழ்க்கைக்கு ஒரு வாழ்க்கைத் துணே வேண்டுமன்றாே? மனைவியின் மாண்பே இல்லற இன்பத் தினேயும் அமைதியினையும் இயைவிப்பதாகும். மனேவி மாண்புடையவளானல் வாழ்க்கையில் இல்லாமைக்கு இட மில்லே. மனேவி குணக்கேடளாயின் அனைத்தும் இருந்தும் ஒன்றும் இல்லாமைக்கு நேராகும்;

‘’ இல்லதென் இல்லவள் மாண்பால்ை உள்ளதென்

இல்லவள் மாளுக் கடை.” எனவே நற்பண்பு வாய்க்கப்பெற்ற கங்கை கல்லாளே இல்வாழ்க்கை இனிமையுடன் இயங்கப்பெற முதன்மை யுடையவள் ஆகின்றாள். அத்தகு நற்பண்பு குறைவறக் குடிகொண்டுள்ள-கொண்கன் குறிப்பறிந்து நடக்கும் குணம் கிறைந்த மனைவி ஒருவனுக்கு வாய்க்க வில்லையெனின் அவன் வாழ்க்கை பிற துறைகளில் எவ்வளவுதான்

7. திருக்குறள் : 77 8. திருக்குறள் : 80 9. திருக்குறள் : 53