பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்களங்கள்

‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் எழுந்த முதற் பெருங்காப்பியமாகும். காவிரி கடலொடு கலக்கும் புகார் நகரில் வணிகக் குடியில் செல்வ மகளாகப் பிறந்த கண்ணகி, இறுதியில் மண்ணவரும் விண்ணவரும் போற்றும் தெய்வங்கலக்கு உயர்ந்த வரலாற்றினை வண்ணமுற வடித்துக் காட்டுவதே சிலப்பதிகாரத்தின் செய்தியாகும். கற்புக் கடவுளாம் கண்ணகியின் வரலாற்றினைப் பரக்கக் கூறும் லெப்பதிகாரம் முடியுடை மன்னர் மூவரின் செய்திகளையும், சிறப்பாகச் சேரன் செங்குட்டுவனின் இணையற்ற வீரத் தினையும் சிறக்க மொழிகின்றது. பல்வேறு சுவைகள் பாங்குறக் கலந்துவந்து சிலப்பதிகாரம் ஓர் உயரிய காப்பியம் என்னும் உண்மைக்குச் சான்றாக இலங்கு இன்றது. காதலின் இனிய செவ்வியும் ஆண்டு உண்டு; விரத்தின் விம்மிதமும் ஆங்கு உண்டு; இன்பத்தின் சிறப்பும் பேசப்படுகின்றது; அதே நேரத்தில் அவலத்தின் ஆழமும் நன்கு புலகிைன்றது.

வஞ்சிக் காண்டம் சிலப்பதிகாரத்தின் இறுதிக் காண்டமாகும். வஞ்சிக் காண்டத்திலேயே கண்ணகி தெய்வங்கலக்கு உயர்ந்து, பூசையும் விழாவும் பெற்ற பான்மை பேசப்படுகின்றது. ஊடே பத்தினிக்கடவுளுருக் குரிய படிமம் சமைக்கக் கல் வேண்டி வடபுலம் சென்று