பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185

வினின்றும் வழிந்தோடிய ஊன் கலந்த குருதியிலே பேய்மகளிரின் காக்குகளெல்லாம் ஆடலாயின. பகை வரைக் கொன்று குவித்து நூழிலாட்டிய சேரன் செங்குட்டுவன் கூற்றுண்ணும் இயமகை அதுபோது விளங்கினன்.

‘ வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பக்தர்

வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் உயிர்ப்புலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமொடு மாதிர மதிரச் சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர் கறைத்தோன் மறவர் கடுந்தேர் ஊருகர் வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர் மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் களம்கொள் யானைக் கவிழ்மணி காவும் விளங்குகொடி கந்தின் வீங்கிசை காவும் கடுங்குதொழில் ஒழிந்தாங் கொடுங்கியுள் செறிய

எருமை கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபகல் எல்லையின் உண்ணு மென்பது ஆரிய வரசர் அமர்க்களத் தறிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன். ‘

மற்றப் பகைவர்கள் தத்தம் படைக்கலன்களே எறிந்துவிட்டுச் சடை, காவி உடை, சாம்பல் இவற்றைக் தரித்த துறவிகளாகவும், பீலிகைக் கொண்ட சமண முனிவராகவும், பாடகராகவும், பற்பல இசைக் கருவிகளே இயக்குநராகவும், ஆடுவோராகவும் தாக்தாம் வல்ல துறைக்கேற்ற வேடம் பூண்டு மறைவிடங்களிலே பதுங்கி யொளிந்தனர்.

4. சிலப்பதிகாரம் : கால்கோட் காதை : 192.218.