பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

17

கம்பர் காட்டும்

இராமன்-கணவன்

இராமகாதை பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே பாரத நாட்டில் வழங்கிவந்த பழைய கதையாகும். கதை வடிவில் நீண்ட காலம் வழங்கி வந்த இந்தக் கதை, பின்னர் நூல் வடிவம் பெற்றிருக்க வேண்டும் இராம காதையினைக் காவியமாகவும் நாடகமாகவும் கீர்த்தனை யாகவும் கதை படித்து மகிழ்ந்த புலவர் பலராவர். இந்திய மொழிகள் அனைத்திலும் எழுந்த ஒரு பொதுக் கதை ஒன்று உளது என்றால் அது இராமாயணமே ஆகும். காலதேசச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, இச்சரிதம் பல மாறுபாடுகளுடனும் பல்வேறு கிளேக் கதைகளுடனும் பல்வேறு மொழிகளில் இன்றும் வழங்கிவருகிறது. ாடோடிப் பாடல்களிலும் பழமொழிகளிலும் கூட இச்சரிதம் இடம் பெற்றுள்ளது. உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் காட்டில் இராமகாதை தொன்னெடுங் காலக் தொட்டு வழங்கி வந்தது என்பதனை அகநானூறு, புறகானூறு, சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்கள் கொண்டு உணரலாம்.

‘கவிச்சக்கரவர்த்தி என்றும், கல்வியிற் பெரியர் கம்பர்’ என்றும், கம்ப காடுடைய வள்ளல் என்றும், பலபடியாகப் பாராட்டப் பெறும் கம்பர் தாம் இயற்றிய