பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

260

“ உகளும் வாளைகண் டனப்பெடை ஒதுங்கும்வா விகளும்

முகில டைந்துகண் படுத்தபைம் பொழில்களும் முன்னிப் புகைத வழ்ந்தவெண் மாளிகை புறம்பல செறிந்து திகழும் பொன்னகர் மதீனமும் தெரிதரச் சென்றார்.’ “

ஓசை நயம் கவிதைகளில் சிறந்து விளங்கினல் அதிலொரு தனிச் சுவையைக் காணலாம். பெருமானர் அவர்கள் போருக்கு ஆயத்தமாகிக் குதிரை மீதேறிச் செல்லும் விலையினை வருணிக்கப் புகுந்த உமறுப்புலவர், கவிச்சக்கரவர்த்தி கம்பர் சொல்லொக்கும் கடிய வேகம்’ என்று கூறியபடி, சக்பூ என்னும் குதிரையின் வேகம் காற்று வேகத்தினும், ஒலியின் வேகத்தினும், ஒளியின் வேகத்தினும் விஞ்சிய வகையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்,

“ தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியே ருெக்கும்

மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க் கெரியை ஒக்கும் பூவிடத்து அடலின் வங்கூழ் போன்றிடும் சக்புஎன் ருேதும் மாவினைக் கொணர்மி னென்ன முகம்மது சரணம்

வைத்தார்.’

ஒரே சொல்லை ஒரே பாட்டில் மீட்டும் மீட்டும் வரச்

செய்து அதனல் ஓசை நயத்தினையும், இனிமையினையும் புலப்படுத்துவர் கவிஞர். ஹஸ்ரத் அப்துல்லாஹ்(ரலி) எனும் போர் வீரர் ஒருவர் தம் படைக்கலங்கள் எல்லாம் இழந்த விலையில் பெருமானர் (ஸல்) அவர்கள் தந்த ஈத்தம் பாளை ஈர்க்கையே பேராயுதமாகக் கொண்டு மீண்டும் கடும். போர் ஆற்றுகின்றார். பேரீத்தம் பாளைதான் எனினும் அது. விண்ணேயும், மேரு மலையையும், வானத்திடியையும், நோக்கும். கண்ணையும் பிளக்கும் பெரும் செயலினேப் பின்வரும்:

10. சீருப்புராணம் : ம தினம் புக்க படலம்: 5.

11. சீருப்புராணம் : பதுறுப் படலம் : 21