பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

உமறுவின் சீறா நின்றுவிடுகிறது. இதற்குரிய காரணம் விளங்கவில்லை. இருப்பினும் ஐயாயிரத்திருபத்தாறு பாடல்கள் கொண்ட சீறாப்புராணத்தின் இலக்கிய நயம் இனிமை மிகுந்தது. படிக்கப் படிக்கச் சுவை தருவது. செய்யுட்களின் நடை சிந்தைக்கும் செவிக்கும் காவிற்கும் இனிய நடையாக இயன்றுள்ளது. அரபுச் சொற்களும் தொடர்களும் பாட்டு ஓட்டத்திற்குத் தடை செய்தாலும் அவை இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தெள்ளத் தெளிய உணர்த்துவதற்காகவென்றே அமைந்து கிடக்கக் காணலாம்.

முடிவாக, இஸ்லாமியத் தமிழ் உலகில் சீறாப்புராணம் தலை சிறந்த காப்பியமாகும். சிங்தைக்கும் செவிக்கும் இனிய இக்காப்பியத்தைத் தீந்தமிழில் தந்த உமறுப்புலவர் ஒரு தேர்ந்த புலவர் என்று கொள்வதில் தடையு முண்டோ?