பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

264

வழங்கும். “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய” சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாங் திருமுறையாகும்.

முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என வழங்கப் படுகின்றது என மேலே கண்டோம். அவ்வேழு திருமுறைகளிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பக்தப் பெருமான் இயற்றிய அழகிய பாடல்களாகும். கான்கு, ஐந்து, ஆரும் திருமுறைகள் திருநாவுக்கரச சுவாமிகள் பாடிய பதிகங்களாகும். சுந்தரமூர்த்தி காயனர் பாடிய பாடல்கள் ஏழாங் திருமுறையென வழங்கும். இந்த ஏழு திருமுறைகளும் பொதுவாகத் தேவாரம் என்றும் அடங்கன் முறை என்றும் வழங்கப் பெறும். -

உலக மக்களுக்கு உள்ளப் பண்பாட்டை உணர்த்தி, அவர்களே கன்னெறியில் செலுத்தி உயர் லக் கு உய்விக்கும் அருள் நூல்களே திருமுறைகள் எனப்படும். பொதுவாகத் திருமுறை என்பதற்குத் தெய்வத் தன்மை யுடைய நூல் என்பர் பெரியோர். “திரு’ என்ற சொல் லிற்கு விளக்கம் வரையப் புகுந்த பேராசிரியர் “திரு வென்பது பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுக் திருத்தகவிற்றாகியதோர் உள்ள கிகழ்ச்சி; அதுவினையுள்ளுடைமையெனவும் படும்’ என்றார். எனவே இன்பதுன்பத்தினை ஒப்ப எண்ணிச் செயல்படும் மனத்திண்மையே திரு’ என்பது பேராசிரியர் விளக்கத்தின் வழியே புலனதல் காண்க. “வா ள் கொண்டு அறுப்பினும் சந்தனம் பூசினும் ஒ த் த மனநிலை உடையராங் தன்மையினை வடமொழியாளர்

1. கொல்காப்பியம்: மெய்ப்பாட்டியல்: நூ. 25

உரை