பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

270

மானுக்கு முன்பு வாழ்ந்த காரைக்காலம்மையார் பாடி அயருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டினுள் ‘கொங்கை திரங்கி’ என்ற முதற் குறிப்பு டைய திருப்பதிகமும் கட்டபாடைப் பண்ணில் அமைக் திருப்பது ஈண்டு கினைத்தற் குரியதாகும். ஞானசம் பந்தர் முதன் முதலிற் பாடிய இப்பதிகத்தில் அமைந்த பண் கட்டபாடையாதலின், சம்பந்தர் கட்டபாடைப் பண்ணிற் பாடிய திருப்பதிகங்கள் யாவும் தோடுடைய செவியன்’ எனும் இத்திருப்பதிகத்தை யொட்டி முதல் திருமுறையின் முதற்கண் வைக்கப் பெற்றன. அடுத்து, “மடையில் வாளேபாய என்ற திருக்கோலக்காப் பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்துள்ளதாகும். தக்கராகப் பண் அமைந்த பதிகங்களை யடுத்து அதனேடு இயை -புடைய பழந்தக்கராகப் பண்ணில் அமைந்துள்ள பதிகங்கள் வைக்கப் பெற்றன. அடுத்துத் தக்கேசிப் பண் அமைந்த பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்து, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சிப் பண் அமைந்த பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. இறுதிப் பதிகம் மாதர் மடப்பிடி’ என்னும் முதற் குறிப்புடைய திருத்தருமபுரப் பதிகமாகும். இயலிசைத் திறத்தின் வேறுபாடுடமையாலும் யாழில் இசைத்தற்கு அடங் காமையிலுைம் யாழ்முரி’ என இப்பதிகம் வழங்கப் படுகின்றது.

முதல் திருமுறையில் சில அற்புதத் திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. முதலாவது அம்மை தந்த இானப் பால் குடித்த கிலேயில் பாடிய “தோடுடைய செவியன்’ என்னும் திருப்பாட்டு. அடுத்துத் திருக்கோலக்காவில் பொற்றாளம் பெறப்பாடிய “மடையில் வாளே என்னும் பதிகம்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் வேண்டுகோட்படி திருப்பதிகத்து இசை யாழிலடங்கா வண்ணம் பாடிய