பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31



முன்வைத்த அடியைப் பின் பெயர்த்தவனையும், பெண் பெயர் கொண்டவனையும், படை இழந்தோனேயும், ஒத்த படை எடாதோனேயும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் உண்டு என்பது தொல்காப்பிய உரையில்ை தெரியவருகின்றன.

அரசாங்க வருவாய்: அரசாங்க வருவாய் முறைகளுள் (Sources of Revenue) மூன்றைச் சிறப்பாகக் குறிக்கலாம். ஒன்று, குடிமக்களிடமிருந்து வாங்கும் வரி; இரண்டு, வாணிகப் பொருள்களுக்குரிய சுங்கம்; மூன்று, சிற்றரச அளிடமிருந்து கிடைக்கும் திறை. இம்மூன்றும் அல்லாமல் தோல்வியடைந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் செல்வமும், தன் காட்டில் கிடைத்த புதையல் பொருளும். வழித் தோன்றல்கள் இல்லாமையால் வரும் பொருளும் அரசனுக்குரிய பொருள்களாகும்.

குடிமக்களுடைய வருவாயில் ஆறிலொரு பங்கை அரசன் வரியாகப் பெறுவான். உள்நாட்டு வாணிகத் தாலும் வெளிநாட்டு வாணிகத்தாலும் சுங்கப் பணம் கிடைத்து வந்தது. உள்நாட்டு வணிகரிடம் சுங்கம் வசூலிக்கப்பட்டது என்பதனை. சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி’ என்னும் பெரும் :பாற்ைறுப்படை அடிகள் கொண்டு அறியலாம். கடல் வாணிகத்துக்குரிய ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களில் “உல்கு’ எனப்படும் சுங்கப்பொருள் மிகுதியாகக் கிடைத்து வந்தது என்பதனைப் பட்டினப் பாலை கொண்டு அறியலாம். பேரரசனுக்கு அடங்கிய சிற்றரசர் ஆண்டுதோறும் திறைப்பொருள் செலுத்தி வந்த செய்தியினை,

12. பெரும்பாளுற்றுப்படை - வரி 30, 81 13. பட்டினப்பாலை - வரி 120.125.