பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46



தொழிற் பாகுபாடு: பழந்தமிழரிடையே தாம் செய்யும் தொழிலால் பாகுபாடு இருந்ததே தவிரப் பிறப்பால் பாகுபாடு இல்லை. இதனைத் திருவள்ளுவரும்.

  • பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'’ ‘’ என்று குறிப்பிட்டுள்ளார். தன் குடும்பத்திற்குத் தானே முயன்று பொருள் தேடிச் சேர்ப்பது ஒருவனுடைய கடமையாகி அங்காளில் கருதப்பட்டது. தாமாக உழைத்துப் பிழைக்க முடியாதவர்களுக்கும், திக்கற்றவர் களுக்கும், உணவு முதலியன தந்து சமுதாயம் உதவியது. குருடர், செவிடர், முடவர், பிணியாளர், வயது முதிர்க் தோர் முதலியவர்கள் தங்கியிருக்க நகரங்களில் தனியே ஒதுக்கிடம் இருந்ததாகவும், அவ்வாறு காவிரிப்பூப் பட்டினத்தில் அமைந்திருந்த ஒரிடம் “உலக அறவி என வழங்கப்பட்டது என்றும் மணிமேகலைக் காப்பியம் குறிப் பிடுகின்றது.

கல்வி: தமிழர் கல்வியைக் கண்ணெனப் போற்றி னர். கற்றவர்களுக்குச் சென்ற விட மெல்லாம் சிறப் பிருந்தது. ஆண், பெண் இருபாலரும் கற்றனர். சங்க காலத்தில் ஒளவையார், ஆதிமந்தியார், காவற்பெண்டு. வெள்ளிவீதியார், காக்கை பாடினியார், நன்முல்லை யார், மாசாத்தியார் முதலான பெண்பாற் புலவர்கள் பலர் வாழ்ந்து சிறந்த பாடல்களைப் பாடியுள்ளனர். ஒளவையார், தாது முதலான பொறுப்பான அரசியல் கடமைகளையும் மேற்கொண்டிருந்தார் என்பது தெளிவா கின்றது. மதுரை, காஞ்சி முதலிய நகரங்கள் பெருங் கல்வி நிலையங்களாக அங்காளில் விளங்கின. உடம்பு

தமிழர்க்குப் பல்லாண்டுகட்கு முன்னரே வாய்த்திருந்தது.

14. திருக்குறள் 72