பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

கட்டடங்கள் பல மதுரையில் அன்று விளங்கின. காற்று மெல்ல வந்து தவழ்கின்ற முறையில் சன்னல்கள் அமைக்கப் பெற்றிருந்தன. சாக்கடை நீர் கண்ணிற்குப் புலப்படாத வகையில் கிலத்தின் கீழ்ச் செல்லும் சாக்கடைகள் அமைக் கப்பட்டிருந்தன. பூங்காக்களிடையே வேண்டும்போது ர்ே பொழியச் செய்யவும், வேண்டாதபோது கிறுத்தி விடவும், வேண்டிய அளவில் நீரைக் குறைத்துப் பொழியவும் கூடிய எந்திரவாவிகள் இருந்தன. பல்லவர் காலத்தில் மலைகளைக் குடைந்து அவற்றில் அழகான சிற்பங்களே அமைத்துக் கோயில்களைக் கட்டும் கலை வளர்ந்தது. அக்கலை பெரிதும் வளர்ந்து பிற்காலச் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்திலே பெரும் பெரும் கோவில்களாக உருப்பெற்றன. கல் காணப்பெருத தஞ்சை மாவட்டத்தில் முதல் இராசராச சோழனல் பதினேராம் நூற்றாண்டில் கட்டப் பெற்றுள்ள பிரகதீசுவரர் கோயில் கட்டடக்கலையின் பெருமையினைப் பறை சாற்றுவதாகும். காயக்க மன்னர்கள் காலத்தில் கோயில்களில் ஆயிரக்கால் மண்டங்கள் அழகுற அமைக்கப்பட்டன.

சமயம் : சங்க காலத்தில் சிவபெருமான், திருமால். முருகன், கொற்றவை முதலியவர்களுக்குக் கோட்டம் அல்லது நகர் என்னும் பெயரால் கோயில்கள் அமைக் திருந்தன. அக்கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு நடத்தினர். சமணமும் பெளத்தமும் பழந்தமிழ் காட்டில் ஒரளவு பரவியிருந்தன. சமயப் பொறை சங்க காலத்தில் விளங்கி இருந்தது. சமயக் காழ்ப்பு அன்று இல்லை. மக்கள் தத்தம் எண்ணத்திற் கேம்பச் சமயப் பற்றுக் கொண்டு தாம் விரும்பிய கடவுளரை அமைதியோடு வழிபட்டு வந்தனர். க ட வு ளு க் கு த் திருவிழாக்கள் எடுத்துக் கொண்டாடுவது என்பது அக்காளில் விளக்கம் பெற்றிருந்தது