பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55



‘அரசர் நாடோறும் தாம் மேற்கொள்கின்ற செற்ற மாவன: சிறை செய்தலுஞ் செருச்செய்தலும் கொலே புரிதலும் முதலியன; சிறந்த தொழில்களாவன: சிறை விடுதலும் கொலை யொழிதலும் இறை தவிர்தலுங் தானஞ் செய்தலும் வேண்டியன கொடுத்தலும் பிறவு மாம்; மங்கல வண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க்கண்ணும் அருளே விகழ்த்தலின் அதனை வெள்ளணி யென்க’ என்று விளக்கமும் கூறியுள்ளார்.

புறப்பொருள் வெண்பாமாலையில் பெருமங்கலம்

3. 1. பிற்காலத்து இலக்கண நூலான புறப் பொருள் வெண்பாமாலை மன்னனுக்கு உரித்தான மங்க லங்கள் பலவற்றினைக் குறிப்பிடுகின்றது. வேந்தனின் செம் மாந்திருந்த வெற்றியினைச் சிறப்பித்தலை வீற்றினிதிருந்த பெருமங்கலம் ‘ என்றும், வேந்தனின் திருமணத்தினை விரிப்பதனே “மணமங்கலம்’ என்றும், மன்னனின் மகன் பிறந்த நாள் விழாவினைப் பொலிவு மங்கலம் ‘ என்றும், மன்னன் பிறந்த நாள் விழாவினை நாண் மங்கலம் : என்றும், அரசனின் குடைச் சிறப்பினைக் குடை மங்கலம்’ ‘ என்றும், வாட் சிறப்பினை வாண் மங்கலம்’ என்றும்,

12. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 20. 13. புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம் : 22. 14. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 24. 15. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 24, 16. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 34.

17. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 35.