பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

சேரர் கொடை வளம்

வேந்தர்க்கு வெற்றியை விளைவிப்பது வீரம்: புகழினையும் மாரு மகிழ்ச்சியினையும் அளிப்பது ஈரம் என்னும் கொடைப் பண்பு ஆகும். தமிழ் மன்னர்பால் வீரமும் ஈரமும் குறைவறக் குடிகொண்டிருந்தன. வீரம் விளைவித்த மன்னர்களே ஈர நெஞ்சம் வாய்ந்த மன்னர்களாக விளங்கிக் கொடைப் பண்பைப் போற்றியிருக்கிறார்கள். தொல்காப்பியனர் ‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு எனச் சேர சோழ பாண்டியர் ஆண்ட தமிழகத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருவள்ளுவர்தம், “'வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று’ ‘ என்ற குறளுக்கு உரையெழுதப் புகுந்த பரிமேலழகர், பழங்குடி என்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடி என்று உரையெழுதி, தொன்றுதொட்டு வருதலாவது, சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலங் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று விளக்க வுரையும் கண்டுள்ளார். தொல்காப்பியனர் கருத்தும், பரிமேழலகளின் திருக்குறள் உரை விளக்கமும் பண்டைத் தமிழரசரின் ஈகைத் திறத்தினை எடுத்தியம்யப வல்லன. வாகும்.

1. திருக்குறள்: 955