இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிராம்பு, சன்னல், சாவி, அலமாரி, பாதிரி என்பன தமிழிற் கலந்தன. இவ்வாறே இந்தியாவில் தங்கி வாணிகம் செய்த டச்சுகாரர், பிரெஞ்சியர், ஆங்கிலேயர் முதலியவராலும் தமிழிற் புகுந்த சொற்கள் பலவாகும். ஆயினும் இவற்றைக் கூடியவரை ஒழித்துப் பெரும்பாலும் தூய தமிழில் எழுதுவதே நன்மக்கள் கடமையாகும்.