10
இலக்கிய அமுதம்
வாணிகம்
கிறிஸ்துவிற்கு முன்பு பல நூற்ருண்டுகளாகத் தமிழர் மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள் கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணு டிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழ கினர் ஆவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ங்னம் அயலாரோடு நெருங்கிய உறவு கொண்ட காரணத் தால், 'யாதும் ஊரே யாவரும் கேளிர், என்று கூறலாயினர்.
சங்க காலத்தில் முசிறி, கொற்கை, காவிரிப்பூம் பட்டினம் முதலியன தமிழ் நாட்டுத் துறைமுக நகரங் களாய் விளங்கின. பிற்காலத்தில் நாகப்பட்டினம், காயல்பட்டினம், காந்தளூர்ச்சாலை, மாமல்லபுரம், மயிலை முதலியன துறைமுக நகரங்களாய் இருந். தன சீனப் பேரரசர் தமிழகத்துடன் வாணிக உறவு கொண்டிருந்தனர். உட்நாட்டு வாணிகமும் சிறப் புற நடந்தது. கடல் வாணிகத்தால் தமிழகத்துப் பொருளாதார நிலை உயர்ந்து காணப்பட்டது. தொழில்கள்
பயிர்த் தொழிலுக்கு அடுத்தபடி நெசவுத்தொழில் சிறப்பாகக் கருதப்பட்டது. பருத்திநூல், பட்டு நூல், எலிமயிர் இவைகளால் ஆடைகள் நெய்யப் பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட ஆடைவகைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது அடி யார்க்கு நல்லார் உரையால் அறியப்படும். பொது மக்களுக்குத் தேவையான பலதிறப்பட்ட பொருள் கள் கைத்தொழில்களால் வளம் பெற்றன. பொற். கொல்லத் தொழில் மிகவுயரிய முறையில் அமைந். திருந்தது.