தமிழக வரலாறு
11
பயிர்த்தொழில் நாட்டின் உயிர்நாடி. ஆதலால், தமிழரசர் அதனைக் கண்ணுங்கருத்துமாகக் காத்து வந்தனர். ஆற்றுவசதி இல்லாத இடங்களில் பெரிய ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் எடுப்பிக் கப்பட்டன. மகேந்திர தடாகம் முதலிய பெயர்கள் பல்லவ வேந்தரை நினைவூட்டின. சோழப் பேரரசர், வீரசோழன் ஆறு, முடிகொண்டான் ஆறு என்னும் ஆறுகளையும், இராசராசன் வாய்க்கால் முதலிய விாய்க்கால்களையும் வெட்டுவித்தனர். திருமலை ராயன் ஆறு எ ன்பது பின்நூற்ருண்டுகளில் வெட்டப்பட்டது. இவ்வாறு நாடாண்ட மன்னர் கள் ஆறுகளைத் தோற்றுவித்தும், வாய்க்கால்களைப் படைத்தும், ஏரி குளங்களை ஏற்படுத்தியும், ஆற்றின் கரைகளை உயர்த்தியும் பயிர்த் தொழிலைப் பாது காத்து வளர்த்தனர்.
அளவைகள்
நிறுத் த ல ள ைவ, நீட்டலளவை, முகத்த லளவை, எண்ணலளவை என்பன வழக்கில் இருந் தன. இராசகேசரி மரக்கால், ஆடவல்லான் மரக் கால், அருண்மொழி நங்கை மர்க்கால் என முகத் தலளவைக் கருவிகள், கடவுள், அரசன், அரசியின் பெயர்கள் பெற்று விளங்கின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கிலிருந்தன.
சமுதாய வரலாறு
சங்க காலத்தில் தொழில் பற்றிய பிரிவுகளே சமு. தாயத்தில் இருந்தன. பின்பு, கொல்லன் மகன் கொல்லனுகவும், பறையன் மகன் பறையனுகவும் கருதத்தகும் முறையில் சாதிகள் ஏற்பட்டுவிட்டன. வடநாடு வருண பேதங்கள் இந்நாட்டிலும் நுழைக் கப்பட்டன. இவ்வேறுபாடுகளால் சமுதாயத்தில் இருந்த ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. ஒருவன ஒரு வன்உயர்ந்தவனுகவும் தாழ்ந்தவனுகவும் கருதினமை யால், உயர்வு மனப்பான்மையும் இழிவு மனப்பான் மையும் மக்களிடையே வேரூன்றின. சமுதாயத்தில்