பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இலக்கிய அமுதம்


ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதியிலும் 3 முதல் 12 வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. மநுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் வகுக்கப்பட்டது. அம்முறைப்படி நாடாண்டதாக மன்னர்களும் வெட்கமின்றிப் பன்ற சாற்றிஞர்கள். இவ்விழி நிலையால், சங்க காலத்தில் ஒன்றுபுட் டிருந்த் தமிழ்ச் சமுதாயம், பின் நூற்ருண்டுகளில் சின்ன்பின்னப்பட்டது. சோழப் பேரரசில் இச்சா திக் கொடுமைகள் தலைவிரித்தாடின. இன்ன வகுப் பார் தெருக்களில் செருப்பணிந்து போகலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டினுலும் இத்துணைச் சன்னல் களுக்குமேல் வைக்கக்கூடாது என்று மன்னனது ஆனே இருந்தது. இத்தகைய கொடுமைகள் சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன , சித்தர் களும், இராமலிங்கர் போன்ற பெரியாரும் சாதிகளை யும் அவ்ற்றை வற்புறுத்தும் பாழான சாத்திரங்களை யும் வன்மையாகக் கண்டித்தனர். காந்தியடிகளா லும் பெரியாரது பெருந்தொண்டினுலும் அரசாங்கத் தின் சட்டத்தினுலும் இன்று இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சங்ககாலச் சமுதாய வாழ்க் கையை நோக்கி இன்றைய தமிழ்ச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறலாம். னும், இப்போக்கில் விரைவு வேண்டும்; யாவரும் தமிழர் என்ற எண்ணம் வேண்டும்; கலப்பு மணங் கள் மிகுதல் வேண்டும்; சாதிகள் அறவே ஒழிதல் வேண்டும்; தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் புதிய சட்டம் வகுக்கவேண்டும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் சட்டம் மாய்ந்தொழிதல் வேண்டும். கல்வி நிலை - சங்க காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல் லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முத லிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப் பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்று