உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாறு

13


விளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின் ருேம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்ருண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற் குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிட்ைக்கவில்லை. கர்ல்ப் போக்கில் தொழி லாளர்கள் கல்வியை இழந்தார்கள். கற்கும் உரிமை ஒரு சில வகுப்பினர்க்கே இருந்து வந்தது. சாதி வேறுபாட்டாலும் தீண்டாமையிலுைம் பல வகுப் பினரும் சேர்ந்து படிக்க வசதி ஏற்படவில்லை. இந்த அவல நிலையில், அரசியல் போர்களும் குழப்பங் களும் கொள்ளைகளும் சமயப் போர்களும் சமுதாய அமைதியைக் கெடுத்தன. நாம் செய்த நற்பேற் றின் பயனுக, சாதி வேறுபாட்டைப் பெருத வெள்ளை யர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. யாவரும் கல்வி கற்க முற்ப்ட்டனர். ஏழைகள் பணவசதியின்றி அல்லற்பட்டார்கள். தமிழன்னையின் தவப்புதல்வ ரான காமராசர் ஆட்சியில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இப்பொழுது தமிழ் உணர்ச்சியும் தமிழ் நாட்டுப் பற்றும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன. *

சமய வரலாறு

தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட தமிழர் பலவகைக் கடவுளரை வணங்கிவந்தனர். குறிஞ்சி நில மக்கள் முருகனையும், முல்லை . நில மக்கள் கண் ணனையும், பாலைநில மக்கள் கொற்றவையையும், மருதநில மக்கள் மன்னனையும், நெய்தல்நில மக்கள் கடலையும் வழிபட்டு வந்தனர். வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குடியேறிய காரணத்தால் தொல்காப்பி பர் காலத்தில் கடல்-வருணனுகவும், மன்னன்இந்திரனுகவும் உருவகப்படுத்தப்ப்டும் நிலைமை உண்டாயிற்று என்று கூறலாம். வடவர் கூட்டுற வால் முருகன் சுப்பிரமணியனுளுன்; கொற்றவை