14
இலக்கிய அமுதம்
துர்க்கையாளுள் ; இவ்வாறே பல மாற்றங்களும் சேர்க்கைகளும் சம்யத்துறையில் உண்டாயின. இந்திரனுக்கும் அவன் வாகனமான வெள்ளையானைக் கும், பலதேவனுக்கும் மன்மதனுக்கும் தமிழகத்தில்
காவில்கள் ஏற்பட்டன. சமணராலும் பெளத்த ராலும் ஏற்பட்ட கோவில்கள் பல. வைதிகரின் நுழைவால் வடமொழி மந்திரங்கள் தமிழகத்தில் நுழைந்தன. சுருங்கக் கூறின், சங்க இறுதிக் காலத்தில் பழந்தமிழ்ச் சமயம், வைதிகர் சமயத்தோடு கலப்புண்டது. தமிழர்தம் சிவன் உருத்திர-சிவ ளுக்கப்பட்டான். வட்வர் சமயக்கலைகள் யாவும் தமிழகத்தில் பரவின. கண்ணன் வழிபாடு விஷ்ணு வழிபாடாக மாறியது. இவ்வாறு உண்டான மாறு தலகள பல.
பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் பெளத்த சமண சம்யங்களைத் தாக்கி வெற்றி பெற். றன. அப்போது நாட்டில் பல நூறு கோவில்கள் தோற்ற மெடுத்தன. நாயன்மார்களும் ஆழ்வார் களும் தலந்தோறும் சென்று அருட்பாடல்களைப் பாடினர்கள். நாயன்மார் பாடியவை திருமுறைகள்' என்றும், ஆழ்வார்கள் பாடியவை "அருளிச் செயல்' என்றும் பெயர் பெற்றன. பல்லவர்கள் மலைச்சரிவு களைக் குடைந்து கோவில்களை அமைத்தார்கள்;. பாறைகளையே கோவில்களாக மாற்றினர்கள்; கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்ருக அடுக்கிக் கோவில் கட்டிஞர்க்ள்; பல்லவ மன்னர் சைவ வைணவ சமயங்களுக்குப் பெரிதும் ஆக்கமளித்தனர்; மறையவர்களுக்குப் பல புதிய ஊர்களையும் நிலங் களையும் வழங்கினர்; வடமொழிக் கல்லூரிகளை ஏற். படுத்தினர். இவற்ருல் வைதிகர் செல்வாக்கு நாட் டில் மிகுதிப்பட்டது.
சோழர் காலத்தில் இக் கோவில்களெல்லாம் சிறப்புற்ற்ன. பல கோவில்கள் கற்றளிகளாய் மாறின. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற புதிய கற்கோவில்களும் தோற்றமெடுத்தன. ைச வ