பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இலக்கிய அமுதம்


பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின் மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதை நன்கு விளக்கியுள்ளனர். பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்த முப்பொருள்கள் அறிஞரால் ஒப்புக் கொள்ளக் கூடியவை. ஒவ்வொரு சமயத்திலும் உள்ள சமயக் கட்டுக்கதைகள் நீக்கப்பட்டு, உண் மைக் கொள்கைகள் மட்டும் மக்களால் பின்பற்றப் படுதல் வேண்டும் என்பது நாட்டில் பிறந்த நல்லறி ஞர் கருத்து. மக்களுக்குக் கல்வியறிவும் எண்ணிப் பார்க்கும் ஆற்றலும் வளர வளர, இக்கருத்து வலுப்பெற்று வருகின்றது. மொழிவரலாறு

இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற் பட்டது தொல்காப்பியம். அஃது ஏறத்தாழக் கி. மு. 300-இல் இயற்றப்பட்டது என்று கூறலாம். அந்நூ. லில் சில விட சொற்கள் கலந்துள்ளன. அவை வட வர் நுழைவால் தமிழிற் கலந்துள்ளன. இதல்ை வட வர் நுழைவிற்கு முன் இருந்த தமிழ் நூல்களெல் லாம் தனித் தமிழிலேயே இயன்றவை என்னும் உண்மையை எளிதில் உணரலாம். பின்னர் நாள டைவில் வேதியர் சமயத்தலைவர் ஆயினர். அவர் தம் வழிபாட்டு முறைகள் தமிழ் நாட்டில் பரவின. இன்ன பிற காரணங்களால் சங்ககாலத்திலேயே வட்சொற் கள் தமிழிற் கலந்தன. புத்த் சம்யத்தவராலும் சமண சமயத்தவராலும் பிராகிருதச் சொற்களும் தமிழிற் கலந்தன. வடவர் செல்வாக்கு மிக மிக, தமிழிலும் வடசொற்கள் மிகுந்துகொண்டே வந்தன. தமிழ் :யாப்பிலக்கணத்திலும் வடமொழி இல்க்கணத்தைப் பின்பற்றிப் புதிய பாக்கள் தோன்றின் அணியிலக் கண நூல்களும் தோன்றின. இன்னின்ன சந்தியி னரைப் பாடும்பொழுது இன்னின்ன எழுத்துக்கள் பாவின் முதலில் இருக்க வேண்டும் என்னும் கேடான வரையரையும் ஏற்பட்டது. தமிழாசிரியருள்