பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாறு

17


சிலர் வடமொழியையும் கற்று, வடநூல் வழித் தமி ழாசிரியர் ' என்று பெயர் பெற்றனர் . வட்மொழி இலக்கணத்தால் உண்டான புதுமைகளை யாப்பருங் கல விருத்தியுரையில் நன்கு காணலாம். சோழப் பேரரசர் காலத்தில் பாதி தமிழும் பாதி வடமொழி யும் கலந்த புதிய நடையில் ஆழ்வார் அருட்பாடல் கட்கு விளக்கவுரை எழுதப்பட்டது. சைவமும் வைணவமும் வடமொழி வாணரால் பரப்பப்பட்டன. ஆதலால், அச்சமய நூல்களின் நடை கலப்பு நடை யாகவே காணப்பட்டது. சைவசித்தாந்தக் கருத்துக் களும் கலப்பு நடையிலேயே எழுதப்பட்டன. ஏற்த் தாழ 500 ஆண்டுகட்கு முன் இருந்த வில்லிபுத்துர் ஆழ்வார் இயற்றிய பாரதத்தில் வடசொற்கள் மிகுந் திருத்தலைக் காணலாம். இவ்வாறே அருணகிரி நாதர் பாடல்களிலும், தாயுமானவர் பாடல்களிலும் எண்ணற்ற புராணங்களிலும் வடசொற்கள் மிக் குள்ளன. விஜய நகர ஆட்சியில் தமிழிசை ஒழிந்து, கருநாடக இசை தமிழகத்தில் வேரூன்றியது.

ஒரு மொழியின் சேர்க்கையால் தமிழின் தனித் தன்ன்ம எவ்வாறு கெட்டது என்பதை இதுகாறும் கூறியவற்ருல் நன்கறியலாம். இன்று தமிழுணர்ச்சி வீறு கொண்டிருக்கிறது. தூய தமிழில் பேச வேண் டும் என்று மாணவர் உலகம் துடிக்கின்றது. தமிழறி ஞர்களும் தூய எளிய நடையில் நூல்களை வெளி விடுகின்றன்ர்; தூய தமிழில் பேசுகின்றனர். பழந் தமிழ்ப் பெயர்கள் வழக்கில் வந்து கொண்டிருக்கின் றன. மறைமலையடிகள், திரு. வி. க. போன்ற தமிழ்ச் சான்ருேர்களால் தனித்தமிழ் நடை உருவானது. இன்று அதனை வளர்க்க நற்றமிழர் விழைகின்றனர்.

முடிவுரை

(தமிழ் மக்களுக்குத் தமிழ், தமிழர் தமிழ் நாடு

என்னும் கவலை ஏற்படுதல் வேண்டும் ; மொழியைப் பாதுகாக்கவும் தமிழர் இன ஒற்றுமையை வளர்க்,