உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வேந்தர் ஒழுக்கம்

21


நிகழ்ச்சிகள் என்பது பாண்டியன் கருத்தாதல் அறியலாம். .

இவ் வுண்மைகளை நோக்க, (1) பாண்டியன் தன் மனைவியை நன்கு நேசித்து வந்தான் என்ப. தும், (2) அறநெறி உணர்ந்த சான்ருேரையே அறங்கூறவையத்தில் நீதிபதியாக அமர்த்தி முறை வழங்கி வந்தான் என்பதும், (3) தன் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பதும், (4) உயிர்களைக் காக்கும் அரச குடியிற் பிறத்தல் சிறந்: தது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு வெளியாகின்றன. இத்தகைய சீரிய ஒ ழு க் க முடைய வேந்தனது ஆட்சி செங்கோலாட்சியாக இந்திருத்தல் வேண்டும் எ ன் ப தி ல் ஐய

முண்டோ?

பாண்டியன் நெடுஞ்செழியன்

"நெடுஞ்செழியன் வயதில் இளையவன்; சிறிய

படையை உடையவன், எம்மிடம் நால்வகைப் படை களும் நல்ல நிலையில் இருக்கின்றன, என்று பகை வர் கூறிக் கொண்டு என் மீது போருக்கு வருகின் றனர். இங்ங்னம் வரும் பகைவரை யான் வெல் லேணுயின், (1) என் குடை நிழலில் வாழும் குடி மக்கள் நிற்க நிழல் காணுமல், ' எங்கள் அரசன் கொடியவன் ' என்று கூறிக் கண்ணிர் சிந்திப் பழி தூற்றும் கொடுங்கோல் மன்னன் ஆகக் கடவேன்;

(2) கல்வி, கேள்வி, ஒழுக்கம் இவற்றிற். சிறந்த மாங்குடி மருதனைத் தலைவனுகக் கொண்ட புலவர் கூட்டம் எனது பாண்டிய நாட்டைப் பாடா

தொழிவதாக;

(3) வறியவர்க்குக் கொடுக்க முடியாத நிலை யில் யான் வறுமையை அடைவேளுக.”

என்று மதுரை மன்னன் நெடுஞ்செழியன் சூள் உரைத்தான். இச் சூளுரையிலிருந்து நாம் அறியும் உண்மைகள் யாவை ?

2