பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வேந்தர் ஒழுக்கம்

23


(1) வலிமை மிகுந்த இப் பேரரசன் அடியவர்க்கு எளியவன் - பணிவாரிடம் பண்புடன் நடப்பவன் எனபதும,

(2) பொது மகளிரது சேர்க்கையை விரும்பாத வன், பொது மகளிரைச் சேர்தல் வெறுக்கத் தக்கது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு தெளிவா கின்றன.

முடிவுரை

இம் மூன்று சூளுரைகளிலிருந்தும் - பழந் தமிழரசர்,

(1) இல்லற வாழ்க்கையை இனிது நடத்தியவர், (2) பிற பெண்டிர் சேர்க்கையை வெறுத்தவர், 3) சிறந்த நண்பர்களை விட்டுப் பிரியாதவர், (4) குடிகள் வருத்தங் காணப் பொருதவர், (5) சான்ருேராகிய புல வர் பெருமக்களின் பாராட்டுதலை மதித்தவர்,

(6) வறியவர்க்கு வழங்கி மகிழ்ந்தவர், (7) ஆட்சிப் பொறுப்பை அணுவளவும் தவற விடாதவர் என்னும் உண்மைகள் புல ைத ல் காணலாம்.