பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வறுமையிலும் மான உணர்ச்சி

செல்வம் உடையவராயிருக்கும் பொழுதும் வறி: யரா யிருக்கும் பொழுதும் மானவுணர்ச்சி உடையரா யிருத்தல் சிலரது இயல்பாகும். செல்வரா யிருந்த பொழுது மானவுணர்ச்சி உடையவரா யிருந்தும், வறுமை ஏற்பட்டவுடன் .மான உணர்ச்சி குறைந் தும் காணப்படுபவர் பலர் ஆவர். கேவலம் வயிற். றுக்காக மானத்தை விற்பவரும் உண்டு. செல்வர் மன நிலையைப் படித்தறிந்து, அதற்கேற்பத் தாளம் போட்டு வயிறு கழுவுவோரும் சிலர் உண்டு. இத்த கைய பலருள் சங்க காலப் புலவர் எத்தகையவர் ?.

சங்க காலப் புலவர் வறுமை மிகுந்த வாழ்க்கை யர்; ஆயினும் தன்மான உணர்ச்சி மிக்கவர்; செல் வத்துக்கு வளைந்து கொடாதவர்; தம்மை மதியாதவர் பேரரசர் ஆயினும் பொருட்படுத்தாதவர்; தம்மை மதிப்பவரையே மனமுவந்து மதிப்பவர்; அரசர் அறநெறி தவறி நடப்பினும், அவர் முன் அஞ்சாது. சென்று அறவுரை கூறும் மன வலி படைத்தவர்; குணமென்னும் குன்றேறி நின்றவர். சான்ருகப் புலவர் சிலருடைய செயல்களையும் சொற்களிையும் கீழே காண்போம்.

ஒளவையார்

பாண்’ என்னும் சொல் இசையைக் குறிப்பது. ஆதலால் இசையில் வல்லவர் பரணர் எனப்பட்ட ன்ர். இப் பாணர் தாமே செய்யுள் இயற்றிப் பண் களில் அமைத்துப் பாடுதல் மரபு. என்வே, பாணர் இயற்றமிழில் வல்லவர் என்பது அறியத் தகும். இசையில் வல்ல பெண்பாலர் பாடினியர் எனப் பட்டனர். இப் பாடினியர் மரபில் வ ந் த வர் ஒளவையார் என்ற சங்க காலப் புலவர், இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/25&oldid=640708" இலிருந்து மீள்விக்கப்பட்டது