பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இலக்கிய அமுதம்


ஏன்று கூறினர். இக் கூற்றிலிருந்து அரசனது செல்வத்தையும் செல்வாக்கையும் மதியாத ஒளவை யாரது மன வலிமையை நாம் நன்கு அறியலாம்.

பெருஞ்சித்திரளுர்

பெருஞ்சித்தனர் என்னும் புலவர் பெருமான் குமண வள்ளல் காலத்தவர். அவர் வறுமையில் உழன்ருர். அவர் தாயார் கோலூன்றிய கிழவி அவ் வம்மையார் வறுமையில் வாடி, எனக்கு ஏன் இன் னும் இறப்பு வரவில்லை' என்று வருந்திக் கொண்டி ருந்தார். பல நாள் பட்டினியால் மனைவியும் உடல் நலமற்றிருந்தாள். மனைவிக்குப் பால் கொடுக்கும் மார்பு வற்றிவிட்டது. பால் வந்து கொண்டிருந்த கண்கள் தூர்ந்து விட்டன. குழந்தைகள் அம்மார் பைச் சுவைத்துப் பால் வராதது கண்டு அழுதனர். குப்பையில் தானுக முளைத்த கீரையைப் பறித்து உப்பின்றிச் சமைத்துத் தின்றனர். அவர் மனைவி கந்தை ஆடையை உடுத்தி இருந்தாள்.

இத்தகைய கொடிய வறுமையில் வாடிய புலவர், பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவையைப் போல வள்ளல்களை நோக்கிச் சென்ருர், முதலில் வள்ளல் வெளிமான் என்ற சிற்றசரனைக் கண்டார். அப்போது அவன் இறக்கும் தறுவாயில் இருந்தான். புலவர்க்குப் பொருளுதவி செய்யும்படி அப் பெருமகன் தன் தம்பியிடம் கூறி இறந்தான். வெளிமான் தம்பி புலவரது தகுதியை அறியாத காரணத்தாலோ ஆல் லது அவரை மதியாத காரணத்தாலோ சிறிது பொருள் கொடுத்தான். புலவர் தமது வறிய நிலையை நினைந்து அப்பொருளை ஏற்றுக் கொண்டி ருக்கலாம். ஆளுல் அவர் அவ்வாறு செய்யவில்லை, தம் தகுதி கவனிக்கப்படவில்லை என்பது அவர் உள்ளத்தைப் புண்படுத்தியது, தன்மான உணர்ச்சி மேலெழுந்து நின்றது. அதனுல் அப் புலவர் பெரு மான் அப் பரிசிலை ஏற்காது நடந்தார். *, அக்காலத்தில் முதிரமலை நாட்டை ஆண்டு வந்த குமணன் வரையாது கொடுக்கும் வள்ள்லாய்,