உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையிலும் மான உணர்ச்சி

27


விளங்கினன். அவனது கொடைச் சிறப்பைக் கேள்வி யுற்ற பெருஞ்சித்திரளுர் அவ் வள்ளலைச் சென்று கண்டார்; தமது வறிய நிலையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினர். குமணன் கேட்டு உள்ளும் கனிந்தான் புலவர்க்கு வேண்டும் ஆடை. அணிகளையும் பிற பொருள்களையும் அவர் ஏறிச் செல்ல யானைய்ையும் வழங்கின்ை.

கண்ணில்லாதவர் கண் பெற்ருேர் போலப் பெருஞ்சித்திரளுர் பெரு மகிழ்ச்சி யடைந்தார்; யானை மீது அமர்ந்தபடி வெளிம்ான் அரண்மனையை அடைந்தார்; வெளியே காவல் மரத்தில் தமது யானை யைக் கட்டிவிட்டு அரண்மனையுள் சென்ருர், இள வெளிமான்ைக் கண்டார்; கண்டு, -

"அரசனே, எளியவர் வறுமையைப் போக்கும். ஈரம் உன்னிடம் இல்லை. எளியவரைக் காக்கும் வள்ளல்கள் நாட்டில் பலர் உண்டு. இரப்போர் உண்டாதலும் அவர்க்கு இடுவோர் உண்டாதலும் நீ கண்டாய். உனது காவல் மரத்தில் கட்டப்பட். டுள்ள யானை, யான் குமணனிடம் பெற்ற பரிசில். இதனை நீ அறிந்துகெர்ள். இனி யான் போவேன்." (புறநானூறு, செ. 163) என்று கூறிவிட்டுப் பெருமிதத்துடன் நடந்து சென் ருர். இதல்ை நாம் அறிந்து கொள்வது யாது ? புலவர் எவ்வளவு வறுமை யுற்றிருந்த போதிலும், தம் தகுதி அறியாது கொடுக்கப்படும் பரிசிலைக் பெருர் என்பதும், தம் மதிப்பறியாத மன்னர்க்கு, மதிப்பறிந்த மன்னர்பால் பெற்று வந்த பரிசிலைக் காட்டித் தமது மதிப்பை அறியும்படி அறிவுறுத்து வர் என்பதும் இப் புலவர் பெருமான்து செய்கையி: லிருந்து அறிந்து கொள்ளலாம்.

பெருந்தலைச்சாத்தனர்

இப் புலவர் பெருமானும் குமணவள்ளல் காலத். தவர்; உள்ளதை உள்ளவாறு சித்திரித்துப் பாக்கள்