4. சங்ககாலக் கல்வி நிலை
இன்றைய கல்வி நிலை
நமது நாட்டில் வெள்ளையர் ஆட்சி ஏற்பட்டது முதல் இன்று வரையில் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக-பல ஆயிரக் கணக்கான தொடக்க, நிலைப் பள்ளிகள் ஏற்பட்டுள்ளன. 激 யி னு ம் இன்று இந்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் தொகை நூற்றுக்குப் பதினைந்துதான் என்பது கவனிக்கத் தக்கது. இப் பதினைந்து பேரும் தமிழ் மொழியிலோ, ஆங்கிலத்திலோ போதிய புலமை பெற்றவர் அல்ல்ர் ஆங்கிலத்திலோ தமிழிலோ நன்கு பேசவோ எழுதவோ இயலாதவர். இடைக்காலக் கல்வி நிலை
தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான சாதி களும் அவற்றின் உட்பிரிவுகளும் மலிந்து கிடக்கின் றன. வெள்ளையர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இன்னின்ன வகுப்பார்தாம் கல்வி கற்க வேண்டும் என்னும் வரையறை இருந்து வந்தது. மிகச் சில வகுப்பினரே கல்வி கற்க உரிமை பெற்றிருந்தனர். குறிப்பிட்ட சில வகுப்பார் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவர் என்று வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட னர். வேறு சில வகுப்பார் தொழிலாளர் என்ற காரணத்தால் சமுதாயத்தில் தனியாக ஒதுக்கப் பட்டிருந்தனர். இங்ங்ணம் பற்பல காரணங்களால் தமிழ்ச் சமுதாயம் சின்ன பின்னப்பட்டுச் சீர் கெட் டிருந்தமையால், மன்னர்களால் ம தி க் க ப் பட் ட 'மறையவருட் பெரும் பாலர் வடமொழிக் கல்வியை யும் பிற வுயர் வகுப்பினர் தமிழ்க் கல்வியையும் கற்று வந்தனர். பாடத் திட்டத்தில் சமயக் கல்வியே சிறப்பிடம் பெற்றிருந்தது. இடைக்கால நூல்கள்