பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இலக்கிய அமுதம்


நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

நெடுஞ்செழியன்

கண்ணுடையர் என்பவர் கற்ருேர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.'

என்னும் உண்மையைப் பழந்தமிழ் அரசர் பண்புற உணர்ந்தவர். அதல்ை அவர்கள் எல்லோருக் கும் கல்வி வசதி யளித்தனர்; வெளிப்படையாகக் கல்வியின் நலனைக் குடி மக்களுக்கு வற்புறுத்தி வந் தனர். பாண்டியன் நெடுஞ்செழியன், "ஒரு தாய், தான் பெற்ற மக்களுள் கற்றவனையே பெரிதும் விரும்புவாள்; சமுதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்த வன் என்ற வேறுபாடு இருந்தாலும், கல்வியில் தேர்ந்த தாழ்ந்தவனையே உயர்ந்தவன் விரும்பு வான்; நாடாளும் மன்னன் ஒரு குடியிற் பிறந்த பலருள் வயதால் மூத்தவனை யோசனைக்கு அழையா மல், அறிவாற் சிறந்தவனையே அழைத்து யோசனை கேட்பர்ன். இங்ங்னம், கற்றவன்ே வீட்டிலும், சமுதாயத்திலும், நாட்டிலும் சிறப்படைவான். ஆதலால் ஒவ்வொருவரும் எப்பாடு பட்டாகிலும் கல்வி கற்பது நல்லது,” என்னும் கருத்துப்பட ஒரு செய்யுளைப் பாடியுள்ளான். அச் செய்யுள் பின் வரு மாறு:

" உற்று பூழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே: பிறப்போர் அன்ன உடன் வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னது அவருள் அறிவுடை யோனு று அரசும் ச்ெல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.”