உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இலக்கிய அமுதம்


இயற்றமிழ்ப் பள்ளிகள் மிகப் பலவாக இருந்திருத் தல் வேண்டும்; இசைத் தமிழ்ப் பள்ளிகள் பல இருந்திருத்தல் வேண்டும். இங்ங்னமே நாடகத் தமிழ்ப் பள்ளிகளும் நன்முற்ையில் நடை பெற்றி ருத்தல் வே ண் டு ம். இவை இருந்திராவிடில், நானூற்றுக்கு மேற்பட்ட இயற்றமிழ்ப் புலவர்களை யும் எண்ணிறந்த இசைவாணர்களையும் மிகப் பலரா கிய கூத்தரையும் சங்க காலம் பெற்றிருக்க வழி

இயற்றமிழில் வல்ல புலவர்கள் எண்ணிறந்த இலக்கண நூல்களையும் மிகப் பல இலக்கிய நூல் களையும் கற்றவர். இசைத் தமிழ்ப் புலவராகிய பாணர்களும் பாடினியர்களும் குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளிலும் வல்லவராய் அக்காலத்தில் விளங்கிய சீறியாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் முதலிய பல வகை யாழ்களையும் வாசிக்கும் திறன் வாய்ந்தவராய் விளங்கினர். அக்காலத் தமிழிசை பற்றிய செய்தி கள் மிகப்பலவாகும். இன்றுள்ள சிலப்பதிகாரம் முதலிய நூல் உரைகளில் இவை பற்றிய செய்திகள் இருத்தலை நோக்க, மிகப் பல இசை நூல்கள் அக் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது. உள்ளக் கருத்தை உடற் குறிப்புகளால் காண்போர்க்கு உணர்த்துவது நடன மும் நாடகமும் ஆகும். இக்கலையில் வல்லவர் கூத்தர், கூத்தியர் என்ப்பட்ட்னர். இக்கலை பற்றி யும் பல நூல்கள் தமிழகத்தில் இருந்தன என்பது இன்றுள்ள சங்கத் தமிழ் நூல்களால் அறியப்படு கின்றது. உள்ளக் குறிப்பை வெளியில் தெரியும் படி நடிப்பதில் விறல் படைத்தவள் விறலி எனப் பட்டாள். - தமிழ் வளர்ந்த முறை

படித்துப் புலமை பெற்ற புலவர் பலர் பள்ளி ஆசிரியர்களாய் அமைந்தனர். வேறு பலர் முடி மின்னர் அவைகளிலும் சிற்றரசர் அவைகளிலும்