பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை

35


அவைப் புலவராக் அமர்ந்தனர். பின்னும் பலர், ஊர்தோறும் சென்று ப்ேரிகை கொட்டி வாணிகம் நடாத்திய் பேரி-ச்ெட்டிமார் போலவும், பழமரம் நாடிச் செல்லும் பறவைகளைப் போலவும் தமிழைப் பேணி வளர்த்த தகைசான்ற மன்னர்களை நாடிச் சென்று, தம், புலமையை வெளிப்படுத்தி, அவர் தந்த பரிசினைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அப் .பரிசில் கழிந்தவுடன் பிற மன்னர்பால் சென்று தம் புகழ் நிறுவிப் பரிசு பெற்று மீண்டும் வந்தனர். இத்தகைய புலவர் பெருமக்கள் பாடியனவே சங்க காலப் பாடல்கள்.

போர்க்களத்தில் வெற்றி பெற்ற அரசர்களைப் புலவரும் பாணரும் கூத்தரும் சென்று பாடுதல் மரபு. விறல் வேந்தர் அம்முத்தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி அவர் மனம் மகிழும்படி பரிசளித்தல் வழக் கம். சேரன், சோழன் என்னும் முடியுடை அரசர் இருவரையும் அவரோடு இணைந்து வந்த பெரு வேளிர் ஐவரையும் தலையாலங்கானத்தில் முறி யடித்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாட ஞர், மரங்குடிகிழார், இடைக்குன்றுார் கிழார்போன்ற புலவர் பெருமக்கள் உளமாரப் புகழ்ந்து பாராட்டி யுள்ள பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். வேந்தர்களது வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும், குணநலன்களையும் புலவர்கள் பாராட் டிப் பரிசு பெற்றனர். அங்ங்னமே தக்க காலங் க்ளில் அவர்களுக்கு அரிய அறிவுரைகளைப் பாரட் டிய வேந்தர்கள் அவர்களுக்கு மனமுவந்து பரி சளித்தனர். அரசர் இருவருக்குள் போர் நிகழ இருத்தலை உணர்ந்து, அப்போர் நடைபெருமற். காத்த புலவர்களும் உண்டு. அப்புலவர் பெருமக் களும் பரிசில் பெற்றனர். ஆட்சி முறையிலும் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் அரசர்க்கு அறி வுரை கூறிய அருந்தமிழ்ப் புலவர்களும் அக்கால்த் தில் வாழ்ந்தனர். தன் மனைவியைத் துறந்த பேக னுக்குக் கபிலர், பரணர் முதலிய சான்ருேர் அறிவுரை பகன்றனர் என்பதைப் புறநானூற்றில் காணலாம்.