உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்குன்றனர் பொன்மொழிகள்


மனிதனது இன்ப வாழ்வுக்கு உயிர் நாடியான இப் பேருண்மையை மிகச் சுருக்கமாக உரைத்தருளிய புலவர் பெருமானுக்கு நமது நன்றி உரியதாகுக.

(3) உலகில் மலர்ந்த் பூ வாடுதல் இயல்பு; தோன்றிய ஒன்று மறைவதும் இயல்பு; அதுபோல் பிறந்தவர் இறத்தலும் இயல்பு.'பிறந்த நிர்ம் இற வாமல் இருக்கப் போகிருேம்; இவ்வுலக இன்பங்களை எல்லாம் நுகரப் போகிருேம் என்று எண்ணுதல் ஆறிவற்ருர் இயல்பு:அறிவு படைத்த்வர், பிறந்தவர் இறத்தலால் எப்பெர்ருளும் நிலையுடையதன்று என்னும் உண்மையை உணர்வர் ; அதனுல் பற். றற்ற நிலையில் வாழ்வர். அறிவுடைய் செல்வர் ஊர் நடுவில் உள்ள ப்முத்த மரம் போல மக்கட்குப் பயன் படுவர்; வாழ்வைப் பெரிதாக எண்ணி, வறு மையால் வாடும் எளியவர்.பால் இரக்கம் கொள்ளாதி ரார். இச் சிறந்த மனிதப் பண்பை ஊட்டி வளர்க் கக் தக்கது கணியன் பூங்குன்றனரின் பொன்மொழி. அது,

சாதலும் புதுவதன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.” என்பது.

முடிவுரை இப்பொன்னுரைகளையும் இவற்றின் பரந்த பொருளையும் உள்ளத்தில் ஆழப் பதித்தல் நன்று. (மனிதன் தன்னைப் போலவ்ே பிறரை ந்ேசிக்க்க் கற்றுக்கொள்ளவேண்டும்; அந்நிலையில் அவன் எந்த நாட்டையும் தன்னுடென்று மதிப்பான். மனிதன் எந்த நாட்டவனுயினும் எங்கும் சென்று வாழலாம் என்னும் மன அமைதி பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று மனம் மகிழப் பாடு வான். தான் உயர்வதும் தாழ்வதும் தன்னுலே தான் என்பதை உணரும் அறிவு மனிதனை வாழ். விக்கும். தோன்றுவது அழியும் என்ற உண்மை