44
இலக்கிய அமுதம்
மணந்து வாழும் வாழ்க்கை 'கற்பு' எனப்படும். களவு மணம் குறிஞ்சித் திணை என்றும், கணவன் மனைவியை வீட்டில் விட்டு ஒரு காரணமாகப் பிரிதல் பாலேத்திணை என்றும், அப்பிரிவில் மனைவி ஆறுதல் பெற்றிருத்தல் முல்லை என்றும், மனைவி கனவ்ளுேடு கற்பு மணத்தில் வாழ்தல் மருதம் என்றும், கணவன் ஒரு காரணமாகப் பிரிந்து சென்ற பொழுது மனைவி இரங்குதல் நெய்தல் என்றும் பெயர் பெறும். இந்த ஐவகை ஒழுக்கங்களையும் பற்றிய பாடல்களே அகப் பாடல்கள் என்று பெயர் பெறும்.
அகநானூறு •
கணவன் தன் இல்லற வாழ்க்கையில் கற்பதற் காகவும், வாணிகத்திற்காகவும் வேறு அலுவல் காரணமாகவும் மனைவியை விட்டுப் பிரிதல் உண்டு. அங்ங்ணம் அவன் பிரிந்து சென்று மீண்டதும், தான் சென்ற ஊர்களில் அல்லது நாடுகளில் தான் கண்ட சிறந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும், தான் கேட்ட சிறந்த நிகழ்ச்சிகளையும் தன் இல்லத் தாரிடம் கூறுவது வழக்கம். இங்ங்ணம் கூறப்பெற்ற செய்திகளில் பல நாட்டு வரலாற்றுச் செய்திகள் அடங்கும்; பல ஊர்களின் இயற்கைச் சிறப்பும் பொருளாதாரப் பொலிவும் பிறவும் அடங்கியிருக் 器 அவன் இல்லாத பொழுது அவன் மனைவியும்
தாழியும் அவை பற்றிப் பேசுவதுண்டு.
பாடலிபுரம்
சந்திரகுப்த மெளரியன் அரசன் ஆவதற்கு முன்பு பாடலியைத் தலைநகராகக் கொண்ட மகத் நாட்டை ஆண்டு வந்தவர் நந்தர் என்பவர். மகா பத்ம நந்தின் தன் எட்டுப் பிள்ளைகளோடும் மகத நாட்டை ஆண்டு வந்தான். அதனுல் இவர்கள் 'நவ நந்தர்கள்" என அழைக்கப்பட்டனர். இந் நந்தர் செல்வச் சிறப்பு வாய்ந்தவர். இந்த உண் மையை "நந்தரது செல்வம் பெறுதற்கு வாய்ப்பு