பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அகநானூறு - 2

இக்காலத் தமிழர் திருமணத்தில் புரோகிதன் இடம் பெறுகிருன்; எரி ஒம்பப்படுகிறது, மணமக்கள் தீவலம் வருகின்றனர்; அம்மி மிதிக்கப்படுகிறது; அருந்ததி காட்டப்படுகிறது; மணமகன் காசி யாத்திரை போகிருன்; புரோகிதன் தமிழர் திருமணத் தில் தமிழர்க்குப் புரியாத வேற்று ம்ொழியில் மந்திரங்களைச் சொல்கிருன். இவை எல்லாம் அகநானூறு போன்ற பழந்தமிழ் நூல்களில் கூறப் பட்டிருக்கின்றனவா? இவை தமிழருக்குரிய திரு

மணச் சடங்குகளா?

அகநானூறு என்னும் தொகை நூலில் இரண்டு பாக்களில் கூறப்பட்டுள்ள இரண்டு திருமண நிகழ்ச்சிகளை இங்குக் காண்போம்:

1. திருமண வீட்டு முற்றத்தில் வரிசையாகக் கால்களை நிறுத்திப் பந்தல் போடப்பட்டிருந்தது. மணவறையில் மாலைகள் தொங்க விடப்பட்டிருந் தன. விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. ஒருபால் உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த பொங்க லோடு மணவிருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. சந்திரனும் உரோகிணியும் கூடிய விடியற் காலை யில் முதிய மங்கல மகளிர் மணப் பெண்ணை நீராட்டு வதற்குரிய நீரைக் குடங்களில் கொண்டு வந்து தந்தன்ர். மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் அக்குடங்களை வாங்கி, “கற்பு நெறியினின்றும் வழுவாமல் நல்ல பல பேறுகளைத் தந்து கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையை ஆகுக,” என்று வாழ்த்திக்கொண்டே மணமகளை நீராட்டி :னர். அந்நீரில் மலர்களும், நெல் மணிகளும் இடப் பட்டிருந்தன. இங்ங்னம் நீராடப் பெற்ற மணமகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/48&oldid=640731" இலிருந்து மீள்விக்கப்பட்டது